ஜாமீனில் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த பிரபல யூட்டுப்பர் டிடிஎப் வாசன், நீங்களே நியாயமா?  என சொல்லுங்களேன். நான் உதாரணமாக தானே இருக்கேன். சிறை அனுபவம் கண்டிப்பா கஷ்டம் தான். எனக்கு கொஞ்சம் உள்ள எல்லாம் நிறைய சிறைவாசிகள் எல்லாம் தெரிஞ்சவங்க இருந்தாங்க. கை உடைஞ்சிருக்கு… குளிக்கிறதுக்கு ரொம்ப கஷ்டம்…  முதுகெலும்பு உடைஞ்சிருக்கு… படுகிறது கொஞ்சம் கஷ்டம்…. பசங்க தான் தலையெல்லாம் குளிப்பாட்டி விட்டாங்க. ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருந்தாங்க, ஓகே தான்… அதிகாரிகள் எல்லாரும் பண்பா தான் நடத்தினார்கள்.

பைக் தான் என்னோட லைப். என்னோட பேஷனை தான், நான் ப்ரொபஷனலா மாத்தி இருக்கேன். என் லைஃப் ஃபுல்லாமே நான் பேஷனுக்காகவே அர்ப்பணித்து இருக்கேன். அப்படி இருக்கும்போது பத்து வருஷம் வாகன ஓட்டுநர் உரிமம் இரத்து செஞ்சது ஏதோ நியாயம் இல்லாத மாதிரி இருக்கு. இது திருத்துகின்ற மாதிரி இல்ல. வாழ்க்கையை  அழிக்கணும் என்கிற மாதிரி இருந்துச்சு, பட் ஒன்னும் பிரச்சனை இல்ல.

குடுத்த கம்ப்ளைன்ட் தப்பா இருக்கு.   நான் ஆக்சிடென்ட் ஆகிய உடனே நான் மயங்கிட்டேன்.  கம்ப்ளைன்ட்ல புதுசு புதுசா எழுதி இருக்காங்க.என்னை பார்த்து சிறுவர்கள் தப்பான முறையில் என்ன இயக்குறாங்க. ஏன் சிறுவர்கள் கிட்ட பைக் தர்றீங்க ? ஏன் சிறுவர்கள் கிட்ட பைக் தர்றீங்க ? நான் என்னோட எல்லா வீடியோஸ்ல சொல்லுறேன். அதுலாம் பாத்து இம்ப்ரஸ் ஆக மாட்டாங்க ? நீங்க சொல்லுறீங்களே என்னை பார்த்து சிறுவர்கள் பெரிய சூப்பர் பைக் எல்லாம் கேக்குறாங்க.

நீங்க சொல்லுறீங்களே என்னை பார்த்து சிறுவர்கள் பெரிய சூப்பர் பைக் எல்லாம் கேக்குறாங்க அப்படின்னு…. நான் குட்டி பையனா இருக்கும்போது ஹெலிகாப்டர் வேணும்னு வீட்டுல சண்டை போட்டேன். நம்ம தானே குழந்தைகளுக்கு சொல்லி திருத்தணும். கேட்டவுடனே வண்டி வாங்கி தருவது என்ன நியாயம் ?  இந்த ஜெனரேஷன் எல்லாம் ரொம்ப ஸ்மார்ட். நீங்க சொல்லுங்க பத்தாவது படிக்கும்போது என்ன பார்த்துட்டு இருப்பீங்க ? டிவி…  உங்களுக்கு இந்த அளவுக்கு மெச்சூரிட்டி இருக்குமா ? உங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க. ஆனால்  இப்போ இருக்குற டென்த், 12த் ஸ்டூடண்ட், காலேஜ் ஸ்டூடண்ட் எவ்ளோ மெச்சூரிட்டியா இருக்காங்க. கரெக்டான வழியில் அவங்க போனா இன்னும் பயங்கரமா போவாங்க என தெரிவித்தார்.