இந்தியாவின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, நம் தேசபக்தியை சமையலில் காண்பிக்கும் விதமாக அருமையான ரெசிபி ஒன்றை தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்:

கேசர் சிரப்: 2 டேபிள் ஸ்பூன்  (ஆரஞ்சு நிறத்திற்காக)
தயிர்: 3 கப் (வெள்ளை நிறத்திற்காக)
குஸ் சிரப்: இரண்டு டேபிள் ஸ்பூன் (பச்சை நிறத்திற்கு)
ஏலக்காய் தூள்: ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை: மூன்று டேபிள் ஸ்பூன்

செய்முறை:
1. முதலில் தயிரில் சர்க்கரையும் ஏலக்காய் தூளும் சேர்க்க வேண்டும்.
2. தேசிய கொடியின் காவி நிறம் கிடைப்பதற்காக கேசர் சிரப்பை தயிருடன் கலக்க வேண்டும். பச்சை நிறத்திற்காக குஸ் சிரப் மற்றும் தயிரை தனித்தனியே கலக்க வேண்டும்.
3. வெள்ளை நிறத்திற்காக வெறும் தயிரை அப்படியே வைத்திருக்க வேண்டும்.
4. டம்ளர் ஒன்றில், குஸ் லஸ்ஸியை முதலில் ஊற்ற வேண்டும். அதனையடுத்து, தனி வெள்ளை லஸ்ஸியை ஊற்ற வேண்டும். கடைசியாக கேசர் லஸ்ஸியை அதில் ஊற்ற வேண்டும். தற்போது நமக்கு பிடித்தமான பானத்தின் மூவர்ணப் பதிப்பு கிடைத்துவிட்டது.
5. இப்போது, பிஸ்தாவை வைத்து அலங்கரித்து பரிமாறலாம்.