மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்ததப்பட்டது. இதனால் தற்போது 48 சதவீதம் வரை அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்நிலையில் அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து தற்போது மற்றொரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது விரைவில் 8-வது ஊதிய குழு அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான குறிப்பாணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன் பிறகு 8-வது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு 7-வது ஊதிய குழுவுக்கு பிறகு மற்றொரு ஊதியக்குழு அமைக்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக கூறியிருந்தது. ஆனால் தற்போது 8-வது ஊதிய குழு அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய வரம்பு 18,000 ரூபாயாக இருக்கும் நிலையில் 8-வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால் குறைந்தபட்ச ஊதியம் 26,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதனால் அரசு ஊழியர்களும் 8-வது ஊதியக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பான நல்ல செய்தி விரைவில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.