உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலையின் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அமேசான் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பணிநீக்கம் செய்த நிலையில் 2-ம் கட்டமாக 10,000 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த வரிசையில் தற்போது பிரபல அக்கென்ச்சர் நிறுவனமும் அடுத்த 2 1/2 வருடங்களில் 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 7.40 லட்சம் பேர் பணிபுரிந்து வரும் நிலையில், 40% ஊழியர்கள் அதாவது 3 லட்சம் ஊழியர்கள் இந்தியாவில் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் காரணமாக இந்தியாவில் மட்டும் சுமார் 7000 முதல் 8000 பேருக்கு வேலை போகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் முதல் கட்டமாக எந்த ஒரு ப்ராஜெக்ட்டிளும் கமிட் ஆகாமல் இருக்கும் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு முடிவு செய்துள்ளதாகவும், அதன் பிறகு யாரையெல்லாம் பணி நீக்கம் செய்வது என்பது குறித்து ஹெச் ஆர் நிறுவனம் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.