காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்தார். அதாவது, “இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன். அதற்காக நான் எந்தவொரு விலையையும் தர தயாராக இருக்கிறேன்” என்று எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி பிரதமர் மோடியை மட்டும் விமர்சிக்கவில்லை. ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் அவதூறாக பேசியுள்ளார். தொடர்ச்சியாக இவ்வாறு பேசினால் சாலையில் ராகுல் காந்தி நடமாடுவது கடினம் என்று மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.