தினசரி உணவில் பருப்பு வகைகள் இல்லாமல் சமையல் இல்லை என்று சொல்லலாம். ஏதாவது ஒரு உணவில் ஒருவகை பயிறு நிச்சயம் இருந்துடும். தாவரங்களை விட அதிக சத்துக்கள் நிறைந்ததாக பயிறு வகைகள் உள்ளன. புர சத்துக்கள் அதிகம் உள்ளவைகளில் பயிறு வகை பயிர்களே முக்கிய இடம் வகிக்கின்றன. பயிர் வகைகளில் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐநா சார்பில் 2019 பிப்ரவரி 10-லிருந்து உலக பயிர் வகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பலரும் தினசரி உணவில் ஏதாவது ஒரு பயிறு பருப்பு வகையை சேர்ப்பது நல்லது. காய்கறியை விட இவற்றில் சத்து அதிகம். புரச்சத்து அதிகம் உள்ளவைகளில் பயிறு வகை முக்கிய இடம் வகிக்கின்றன. ஒருவர் தினமும் 85 கிராம் பருப்பை உணவில் சேர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. நிலையான எதிர்காலத்திற்கு பயிறு வகைகள் என்பது இந்த ஆண்டில் மையக் கருத்தாகும்.

சராசரியாக 100 கிராம் பயிறு வகை பயிரில் 335 கலோரி, 20 கிராம் புரச்,சத்து 140 கிராம் கால்சியம், 300 மில்லி கிராம் பாஸ்பரஸ், 8மில்லி கிராம் இரும்புச்சத்து, 0.5 மில்லி கிராம் டயாமின், 0.3 மில்லி கிராம் மியாசிஸ் உள்ளது. இறைச்சி உண்பதால் எவ்வளவு புரச்சத்துக்கள் கிடைக்குமோ அந்த அளவு பயிறு வகை பயிர்களை உண்ணும் போது புரச்சத்து கிடைக்கிறது. அதனால் இது ஏழைகளின் உணவு என்று அழைக்கப்படுகிறது. இதில் கொழுப்புச்சத்தும் நார்ச்சத்தும் இருப்பதால் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் சிறந்த தீவனமாக விளங்குகிறது பயிறு வகைகள்.