விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலைமையில் பி எம் கிசான் திட்டமானது கடந்த 2019 வருடம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த திட்டமானது நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் வேளாண் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கான செலவுகளை செய்து கொள்ள இந்த பணமானது வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து வருடம் தோறும் மூன்று முறை தவணையாக 2000 ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி 2024 ஆம் வருடத்திற்கான இடைக்கால பட்ஜெட் ஆனதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார்.

இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறியிருந்த நிலையில் இந்த வருடம் பி எம் கிசான் தொகையை 50% அதாவது வருடத்திற்கு 6000 முதல் 9 ஆயிரம் வரை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விவசாயிகளிடையேமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது