இந்தியாவில் அரசு மற்றும் தனியா நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எதிர்காலத்தில் பண சேவையை சமாளிப்பதற்காக பி எப் என்பது முக்கியமானதாக உள்ளது. ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறி வேலை பார்த்தாலும் உங்களுடைய pf கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள உங்களது UAN நம்பர் அப்படியே இருக்கும். ஆனால் தொடர்ந்து பிஎப் வசதியை பெறுவதற்கு உங்கள் மொபைல் நம்பரை UAN எண்ணுடன் இணைக்க வேண்டும்.

அப்படி நினைக்காமல் இருந்தால் அதனை எப்படி எளிதில் இணைப்பது என்பது குறித்து இதில் பார்க்கலாம். அதற்கு முதலில் UAN நம்பரை பதிவு செய்ய வேண்டும், ஒருவேளை அப்படி செய்யவில்லை என்றால் அதிகாரப்பூர்வ UAN உறுப்பினர் போர்டல் இணையதளத்திற்குச் சென்று manage பிரிவுக்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு UAN உறுப்பினர் போர்டல் இணையதளத்தை பார்வையிட்டு உள்ளேன் உடைய உங்களது UAN பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

அதன் பிறகு கேப்சாவை உள்ளிட்டு manage விருப்பத்திற்குச் சென்று contact details என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து phone number change என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுடைய தொலைபேசி எண்ணை உள்ளிட்டு பிறகு get authorization PIN பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது புதிய நம்பருக்கு ஓடிபி வந்ததும் அதனை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு மொபைல் நம்பர் உடன் UAN இணைக்கப்படும்.