அனைத்து சம்பளம் பெறும் ஊழியர்களும்  EPFO அமைப்பில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களின் சம்பளத்தில் ஒரு சிறு பகுதி மாதந்தோறும் இந்தக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஒரு பிஎப் கணக்கு திறக்கப்பட்டதும், கணக்கு மற்றும் அதன் UAN எண் அதாவது யுனிவர்சல் கணக்கு எண் ஓய்வு பெறும் வரை அப்படியே இருக்கும். இருப்பினும், தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்காக அடிக்கடி வேலைகளை மாற்றுகிறார்கள்.

இது எல்லோரும் செய்யும் வாடிக்கையான ஒன்றுதான். இந்த நேரத்தில் மக்கள் செய்யும் ஒரு விஷயம், பழைய பி.எஃப்-ல் இருந்து பணத்தை எடுத்து, புதிய நிறுவனத்தில் புதிய பி.எஃப் கணக்கைத் திறப்பதுதான். நீங்கள் இதைச் செய்யும்போது, ​​உங்கள் பெயரில் மற்றொரு UAN எண் தற்செயலாக உருவாக்கப்படுகிறது. PFO பயனாளர்கள் UAN எண்ணை கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும். தற்போது எப்படி UAN எண்ணை அறிந்துகொள்வது என்பதை பார்க்கலாம்.

முதலில், https://www.epfindia.gov.in/site_en/index.php என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று பணியாளர்களுக்கான பகுதிக்குள் நுழைந்து உறுப்பினர் UAN/ஆன்லைன் சேவை (OCS/OTCP) என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர், உங்கள் UAN ஐ அறிந்து கொள்ளுங்கள் என்பதை கிளிக் செய்து உங்களது மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை பதிவு செய்து OTP பதிவு செய்யவும். பின்னர், புதிய பக்கம் திறக்கப்படும். அதில், பெயர், பிறந்த தேதி, உறுப்பினர் ஐடி, ஆதார் அல்லது பான் எண் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை உள்ளீடு செய்து UAN ஐக் காட்டு என்பதை கிளிக் செய்யவும். பின்னர், உங்களின் UAN எண் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்