நெல்லையில் நடிகர் விஜய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்

நடிகர் விஜய் நெல்லை பாளையங்கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் அவர்கள் பட்ட சிரமங்கள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கான அந்த வெள்ளத்திற்கு உதவியாக சிறு தொகையும் வழங்கினார். காய்கறி, மளிகை சாமான் உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் அவர் தொடர்ந்து அளித்து வருகின்றார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர்களுக்கான மதிய உணவு அவர்களை பத்திரமாக கொண்டு சென்று விட்டில் சேர்ப்பது போன்றவை நடைபெற உள்ளது.

ஒவ்வொரு பொது மக்களும் அவர்கள் அமர்ந்திருக்க கூடிய இடத்திற்கு சென்று நடிகர் விஜய் தற்போது காய்கறி மளிகை சாமான் போன்றவற்றையெல்லாம் கொடுத்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் தனியார் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. தனியார் மண்டபத்தில் நடைபெறக்கூடிய இந்த நிவாரண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தான் சார்ந்து இருக்க கூடிய மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் பங்கேற்றுள்ளார். உள்ளே வந்திருக்கக்கூடிய நபர்கள் அதிகமான அதிக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள். மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட நபர்கள்.. தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களை இயக்கத்தின் உடைய நிர்வாகிகள் தங்களுடைய பகுதிகளில் யார் அவர்களின் வீடுகள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டதோ.. யாருடைய வீடுகள் எல்லாம் இடிந்து விழுந்துள்ளதோ அவர்களின்  பெயர் பட்டியலை தயாரித்து அதனை சென்னையில் இருக்கக்கூடிய தலைமை கழகத்திற்கு கொடுத்து அவர்கள் அந்த இறுதிப் பட்டியலை கொடுத்துள்ளனர்..

அந்த அடிப்படையில் 1000 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது. இதில் வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. வீடுகள் சேதமடைந்த 30 பேருக்கு தலா 25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மழையால் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்க்கு தலா 1 லட்சம் வழங்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறு தொகை கவரில் வைத்து வழங்கப்படுகிறது. அதேபோல அனைவருக்குமே மளிகை சாமான், காய்கறி போன்றவை வழங்கப்பட்டது. 5 கிலோ அரிசி, சர்க்கரை, ரவை, கோதுமை, சேமியா அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

அவர்களுக்கு ஆறுதலோடு சேர்த்து இந்த உதவியும் செய்யப்படக்கூடிய காரணத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். அனைவருமே சிரித்தபடி வாங்கிக் கொண்டனர்.. பொதுமக்கள் எழுந்து வர வேண்டாம் நானே இடத்திற்கு வந்து உதவிகளை செய்கிறேன் என்று விஜய் மக்கள் அமர்ந்திருக்க கூடிய அந்த இருக்கைக்கு சென்று அவர்களிடம் அந்த நிவாரண பொருட்களை வழங்கினார். விஜயிடமிருந்து பெறும்போது இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்கள் வயதானவர்கள் என அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியோடு உற்சாகத்தோடு அந்த பொருட்களை வாங்கினார்கள்.. பின் ஒவ்வொருவராக வரிசையில் வந்து நடிகர் விஜயிடம் வந்து நிவாரண பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றனர்..

இதனிடையே நடிகர் விஜய்யை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் கூடியுள்ளனர். காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். முன்னதாக விஜய் வரக்கூடிய வழியில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவருடைய காரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களிலும் பலரும் பின் தொடர்ந்து வந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் என்பது ஏற்பட்டது. அதன் பிறகு உடனடியாக சரி செய்யப்பட்டது. தற்போது வெளியில் காத்திருக்கக்கூடிய ரசிகர்களால் போக்குவரத்து நெரிசல் என்பது கிடையாது மண்டபத்திற்கு வெளியிலே ஏராளமான ரசிகர்கள் கூடியுள்ளனர். உள்ளே இருக்கக்கூடிய 1000 நபர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கக்கூடிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது..

https://twitter.com/vjfangirl15/status/1741013869710196888

https://twitter.com/ImSri_08/status/1741005898397708498