மூத்தக்குடிமக்களுக்குரிய பயண விதிகளில் ரயில்வேயானது மாற்றம் செய்து இருக்கிறது. அதன்படி மூத்தகுடிமக்களுக்கு ரயில்வே சார்பாக பெரிய பரிசு வழங்கப்பட்டு உள்ளது. அதன் கீழ் டிக்கெட் முன் பதிவு செய்யலாம். மூத்தக்குடிமக்களுக்கு லோயர் பெர்த்களை ஈஸியாக ஒதுக்குவது குறித்த தகவலை IRCTC வழங்கி உள்ளது. ரயில்வே பொது ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட் முன் பதிவு செய்தால் இருப்பு அடிப்படையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Reservation Choice Book only if lower berth is allotted-ன் கீழ் முன்பதிவு செய்தால் உங்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும் என ரயில்வேயானது தெரிவித்தது. பொது ஒதுக்கீட்டின் கீழ் முன் பதிவு செய்பவர்களுக்கு இருப்பின் அடிப்படையில் மட்டுமே ஒதுக்கீடு வழங்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உடல் ஊனமுற்றோருக்கு லோயர் பெர்த் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக ரயில்வேயிலிருந்து கிடைத்த தகவலில் தெரிவிக்கப்பட்டது.

அதோடு உடல்ஊனமுற்றோர் உடன் பயணிக்கும் நபர்களுக்கு லோயர் பெர்த் வழங்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் முதியோர், பெண்களுக்கான கீழ் பெர்த் வசதியையும் ரயில்வேயானது தொடங்கி உள்ளது. இதுகுறித்த உத்தரவு ரயில்வே வாரியம் வாயிலாக பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி ரயில்வே மார்ச் 31-ஆம் தேதி பல்வேறு மண்டலங்களுக்கு உத்தரவை வெளியிட்டு உள்ளது.