ஐபிஎல் தொடலில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் 169 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்துவீசிய மும்பை அணியில் துஷாரா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்கள். இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை அணியில் தொடக்கமே சரியாக அமையவில்லை. அதன்படி ரோகித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழக்க, இஷான் கிஷன் 13 ரன்களிலும், திலக் வர்மா 4 ரன்களிலும், நமன் திர் 11 ரன்களிலும், நேஹல் வதேரா 6 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

மும்பை அணியில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்த நிலையில் 56 ரன்களில் கேட்சாகினார். அதோடு டிம் டேவிட்டும் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 18.5 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2-ம் இடத்தில் இருக்கிறது. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 3 வெற்றி 8 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது. இதனால் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை மும்பை அணி இழந்துவிட்டது.