சாமியார் நித்தியானந்தா சர்ச்சைக்கு பெயர் போனவர் ஆவார். இவர் கைலாசம் என்ற பெயரில் ஒரு நாட்டை உருவாக்கி இருக்கின்றார். இந்த நாட்டிற்கு அமெரிக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் புகைப்படங்களும் வெளியானது. அந்தப் புகைப்படத்தில் ஜெனிவா நாட்டில் கடந்த மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கைலாச நாட்டின் சார்பாக பெண் சாமியார் விஜய பிரியா தலைமையிலான தூது குழு பங்கேற்றது போல் இருந்தது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரிவு செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்தது யாதெனில் “கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. அதில் தான் நித்தியானந்தா சார்பாக விஜய பிரியா தலைமையிலான தூதுகுழு பங்கேற்று உள்ளனர். அவர்கள் கூறியதை நாங்கள் எதையும் கருத்தில் கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.