ஐபிஎல் 17வது சீசன் மார்ச் 22 முதல் தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் ஆர்சிபியை சென்னையில் உள்ள சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த பெரிய போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். இந்த துவக்க போட்டிக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்த போட்டியில் ஆர்சிபியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி பல பெரிய சாதனைகளை  படைக்க வாய்ப்புள்ளது. அது என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்..

  • சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் விராட் மேலும் 6 ரன்கள் எடுத்தால், ஒட்டு மொத்தமாக டி20யில் 12000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் பெறுவார். தற்போது விராட் தனது கணக்கில் 11994 ரன்கள் சேர்த்துள்ளார். இந்தப் பட்டியலில் விராட்டைத் தொடர்ந்து அடுத்ததாக இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா (11156), ஷிகர் தவான் (9645) ஆகியோர் உள்ளனர்.
  • இந்தப் போட்டியில் விராட் மேலும் ஒரு ரன் எடுத்தால், சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன்களை எட்டுவார்.
  • இந்தப் போட்டியில் மேலும் 4 கேட்ச்களை விராட் எடுத்தால் ஐபிஎல்லில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். விராட் கணக்கில் 106 கேட்சுகள் உள்ள நிலையில், ரெய்னா 109 கேட்ச்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
  • இந்தப் போட்டியில் விராட் மேலும் ஒரு அரைசதம் அடித்தால் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 10 அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் பெறுவார்.
  • இந்த போட்டியில் விராட் மேலும் 124 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனை படைப்பார்.