ஆசிய விளையாட்டு வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா புனியா வெண்கலம் வென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை சீமா புனியா இதுவரை 3 பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீ சங்கர் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்திய வீரர் முரளி ஸ்ரீ சங்கர் 8.19 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார். அதேபோல மகளிர் heptathlon போட்டியில் இந்தியாவின் நந்தினி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். நீளம் தாண்டுதல் போட்டியில் 1978 ஆம் ஆண்டுக்கு பின் இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்துள்ளது.

முன்னதாக ஆசிய விளையாட்டு போட்டி பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளி பதக்கம் வென்றார். 4 நிமிடம் 12.74 வினாடிகளில் இலக்கை அடைந்து ஹர்மிலன் வெள்ளி பதக்கம் வென்றார். அதேபோல ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் பிரிவில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளனர்.

ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் அஜய்குமார், ஜின்சன் ஜான்சன் பதக்கங்கள் வென்றனர். இந்திய வீரர்கள் அஜய்குமார் சரோஜ் வெள்ளி பதக்கமும், ஜின்சன் ஜான்சன் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். 1962 ஆம் ஆண்டுக்குப் பின் 1500 மீட்டர் பிரிவில் இந்தியாவிற்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன.. ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை 13 தங்கம் உட்பட இதுவரை 51 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

 

 

https://twitter.com/Media_SAI/status/1708468747508629962