ஜாமீனில் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த பிரபல யூட்டுப்பர் டிடிஎப் வாசன், சிறையில் மருத்துவ வசதி எல்லாம் நல்லா தான் செஞ்சு கொடுத்தாங்க. என் கை கோணையா போயிடுச்சு….  மறுபடியும் ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க. பெரும்பாலான ஊடகங்களில் உங்கள் கை உடையவில்லை அப்படி  சொன்னாங்களே ? அதை  எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு,  பதில் அளித்த டிடிஎப் வாசன்,

எனக்கு ரொம்ப ஒரு மாதிரியா ஆயிடுச்சு. நம்ம ஆல்ரெடி பத்து பதினைந்து மன கஷ்டத்தோட உள்ள இருக்கின்றோம்.  நியூஸ் பேப்பர்ல சம்திங்…  யாரோ ஒருத்தங்க சொன்னது மூலமா ?  வெளியே இருந்து புதுசா உள்ள வந்தவர்கள் கையே உடையலாம என்று சொன்னாங்க…  ஒரு கட்டத்துல நானே சொன்னேன். நானே சும்மா தான்பா கட்டு போட்டு இருக்கிறேன். நீ வேற அப்படின்னு சொன்னேன். கை உண்மையாவே உடைஞ்சிருக்கு.

கண்டிப்பா பைக்கும் ஓட்டுவேன். படமும் நடிப்பேன். பேஷனை எப்பவுமே விட்டுக் கொடுக்க முடியாது. இன்டர்நேஷனல் லைசென்ஸ் எடுக்கலாம். இன்னும் மேல்முறையீடு எதுவும் பண்ணலாம். இந்த கை போனதை விட,  லைசென்ஸ் போனதுதான் கண் கலங்கிட்டேன். எல்லாத்துக்கும் ஸ்ட்ராங்கா தான் இருப்பேன்.  லைசென்ஸ் 10 வருஷம் கேன்சல் என்றதும் ரொம்ப வருத்தமா இருந்துச்சு.போராட்டம் பண்ணாம இருந்தது… ஒன்னு கூடாம இருந்ததே ரொம்ப நல்லது. என்ன பார்க்க வரும்போது அது எல்லாம் வேணாம்னு சொல்லிட்டேன்.  நேபால் மட்டும்தான் போய் இருக்கேன். அதுக்குள்ள தான் பாஸ்போர்ட் வாங்கி வச்சிட்டு வேற எந்த நாட்டுக்கும் போக முடியல என  தெரிவித்தார்.