குண்டூர் பகுதியில் செப்ரோலு மண்டலத்தில் உள்ள பாலகோடேஸ்வர சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து முடிக்க, தெனாலி சப்-கலெக்டர் கீதாஞ்சலி சர்மா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர் உள்ளூர் எம்.எல்.ஏ கிலாரி ரோசய்யாவுடன் இணைந்து மகா சிவராத்திரி விழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது “கோயிலில் ரூ.1.56 கோடி மதிப்பில் வளர்ச்சி மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி கொண்டாடப்படும் சிவராத்திரியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள். அதனால் துப்புரவு, காவல், நகராட்சி, மின்சாரம், தீயணைப்புத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தினார்.