குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகிறார்கள். இந்த பக்தர்கள் கையில் காப்பு கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்கின்றனர். அவர்களிடம் பொதுமக்களும் ஆர்வத்துடன் காணிக்கைகளை செலுத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி மற்றும் நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெளிமாநிலங்களில் உள்ள பக்தர்களும் வித விதமான வேடமடைந்து காணிக்கை வசூல் செய்து வருகிறார்கள். இவ்வாறு பக்தர்கள் வசூல் செய்த காணிக்கைகளை பத்தாம் திருநாளான வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் உண்டியலில் செலுத்துவார்கள். அன்று இரவு குலசேகரன் பட்டினம் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சூரசம்கார காட்சி நடைபெற உள்ள நிலையில் கடலில் பக்தர்கள் புனித நீராடி விரதத்தை முடித்துக் கொள்வார்கள். தற்போது பக்தர்கள் பலவிதமான வேடமனிந்து காணிக்கை வசூல் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.