பொதுவாக நம் அனைவரின் வீட்டிலும் பல முறை தேநீர் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் தேநீர் தயாரித்த பிறகு அந்த தேயிலைகளை தூக்கி வீசி விடுவது வழக்கமான ஒன்று. இனிமேல் தூக்கி வீச வேண்டாம். பயன்படுத்தப்பட்ட தேயிலைக்கு உணவாக உதவுவது மட்டுமின்றி சமையலறை மேற்பரப்புகளை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. தேயிலையை வைத்து சுத்தம் செய்யும்போது சமையலறையில் உள்ள அழுக்கு, கிரீஸ் மற்றும் துர்நாற்றம் நீங்கிவிடும் என்று சொல்லப்படுகின்றது.

சமையல் பாத்திரம் மற்றும் தட்டுகளில் இருக்கும் கரை மற்றும் துர்நாற்றத்தை அகற்ற இலைகளை பயன்படுத்தலாம். குளிர்சாதன பெட்டியில் பலவிதமான உணவுகளை வைத்திருப்பதால் சில சமயங்களில் அதனை திறக்கும் போது துர்நாற்றம் வீசும். அப்படி துர்நாற்றம் வீசாமல் இருக்க பயன்படுத்திய தேயிலையை உபயோகிக்கலாம். தேநீர் போட்டுவிட்டு மீதமுள்ள தேயிலைகளை உலர்த்தி ஒரு மஸ்லின் துணியில் பேக் செய்யவும். இந்த பையை குளிர்சாதன பெட்டியில் உள்ள உணவு வாசனையை போக்க குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இதனை மைக்ரோவேவ் மற்றும் ஓவனில் உள்ள துர்நாற்றத்தை போக்கவும் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.