நம்மில் பலருக்கு டீ இல்லை என்றால் அன்றைய நாளை கடப்பது மிகவும் கடினம். பெரும்பாலும் டீ பிரியார்கள் தங்கள் தேநீரை ஸ்நாக்ஸ் அல்லது உணவுகளுடன் சேர்த்து குடிப்பார்கள். ஆனால் அது பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். அதுபோல டீயுடன் நேத்து சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • பச்சை காய்கறிகள் : சில உணவுகளை ஒன்றாக இணைப்பது அவை வழக்கமாக வழங்கும் ஊட்டச்சத்திற்கு தீங்கு விளைவிக்கும். அந்த வகையில் தேநீரில் டானின்கள் மற்றும் ஆக்சிலேட்டுகள் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. மேலும் கீரை அல்லது பச்சை காய்கறிகளில் அயன் சத்து உள்ளது. எனவே டீயுடன் சேர்த்து இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
  • எலுமிச்சை : டீ பிரியர்களில் பலர் லெமன் டீ-யை விரும்புகிறார்கள். ஆனால் தேயிலை இலைகளை எலுமிச்சையுடன் சேர்த்தால் அது அமிலமாக மாறும் என கூறப்படுகிறது. மேலும் இவற்றை ஒன்றோடு ஒன்றாக உட்கொள்ளும் போது வயிற்று உப்புசமடையும். லெமன் டீ-யை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் ஆக்சைடு ரிஃப்ளக்ட் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். இரண்டையும் தனித்தனியாக உட்கொள்ளும் போது நல்ல பலன்களை தரலாம்.
  • மஞ்சள் : மஞ்சள் அதிகம் உள்ள உணவுகளுடன் தேநீர் அருந்துவதை தவிர்க்கவும். தேனீர் மற்றும் மஞ்சளில் உள்ள வேதியல் கூறுகள் செரிமான அமைப்பை பாதிக்கலாம். இதனால் அசிட் ரிப்ளெக்ட்  உருவாகும் என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அசிடிட்டி, செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே மஞ்சள் உடன் தேநீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
  • ஐஸ்கிரீம் : ஐஸ்கிரீம் குளிர்ச்சியாகவும் டீ சூடாகவும் இருப்பதால் செரிமான அமைப்பை பலவீனப்படுத்துகிறது. எனவே இவற்றை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
    அதேபோல டீ அருந்துவதையும் தவிர்ப்பது நல்லது.