மனிதன் 48 மணி நேரத்திற்கு மேல் உணவருந்தாமல் இருந்தால் அவன் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். உயிர் வாழ மிகவும் அவசியமான மூன்று விஷயங்கள் காற்று, நீர், உணவு. காற்று இல்லாமல் சில நொடிகள் வாழலாம். நீர் அருந்தாமல் அதிகபட்சமாக இரண்டு நாட்கள் வாழலாம். உணவில்லாமல் எத்தனை நாட்கள் வாழ முடியும் என்ற கேள்விக்கு இந்த தொகுப்பு பதிலாக அமையும். சிலர் உடல் எடையை குறைக்கிறேன் என்ற பெயரில் இரண்டு, மூன்று நாட்கள் கூட சாப்பிடாமல் இருக்கிறார்கள்.

சாப்பிடாமல் இருப்பதன் விளைவுகள் ஒவ்வொருவரின் உடல் நிலையை பொறுத்து வேறுபடுகின்றது. பொதுவாக சொல்வதென்றால் ஒரு வேலை கூட உணவு இல்லாமல் அதிகபட்சமாக 48 மணி நேரம் தாக்கு பிடிக்கலாம் என்கிறார் பொதுநல மருத்துவர் ஒருவர். இரண்டு நாட்களுக்கு மேல் சாப்பிடாமல் இருந்தால் தசைகளில் உள்ள கிளைக்கோஜன் கல்லீரலில் உள்ள குளுக்கோஸையும் நம் உடல் எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும்.

இவை இரண்டும் குறைந்து விட்டால் அடுத்ததாக உடலில் உள்ள கொழுப்புகள் கரைய தொடங்கும். இறுதியாக செல்களில் உள்ள புரதத்தை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும். இது மிகவும் அபாயகரமான நிலையாகும். இந்த நிலைக்கு கெட்டாசிஸ் என்ற பெயர் என கூறப்படுகின்றது. உடல் இந்த நிலையை எட்டி விட்டால் மிகவும் பலவீனம் அடைந்து விடுவோம். கடும் சோர்வு உண்டாகும், தசைகள் வலுவிழக்கும், எலும்புகள் வலுவிழந்து உடைய தொடங்கும், இதய தசைகள் வலுவிழாப்பதால் ரத்தத்தை பம்ப் செய்யும் ஆற்றல் குறையும்.

அதன் காரணமாக குறைந்த இரத்த அழுத்தம் உண்டாக்குதல், பல்ஸ் ரேட் குறைதல், அல்சர் பாதிப்பு ஏற்படுதல், உடல் குளிர்ச்சி அடைதல், முடி கொட்டுதல் போன்றவை ஏற்படும் என கூறப்படுகின்றது. 72 மணி நேரத்தை கடந்து விட்டால் உடலில் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் புரதத்தை உடல் தின்ன ஆரம்பித்து விடும். இதற்குப் பிறகு நடக்கும் நிகழ்வாக எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மரண வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வுகள் தான். முதலில் சிறுநீரகம், இதயம் ஆகியவையும் பாதிப்படைய ஆரம்பிக்கும்.

அடுத்ததாக உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழக்க தொடங்கும். இது பொதுவான கருத்து. ஆனால் உணவு இல்லாமல் 70 நாட்கள் வரை உயிர் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. BMI 12, 12.5 என்ற அளவில் இருப்பவர்கள் பட்டினியாக இருக்கவே கூடாதாம். அதுபோல போதிய அளவு சாப்பிடா விட்டாலும் இது போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. ஈட்டிங் டிசார்டர் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றது. எனவே அத்தியாவசியமான உணவை போதிய அளவு எடுத்துக் கொண்டு ஆரோக்கியத்துடன் வாழலாம்.