முஹுரத் வர்த்தகத்தின் போது 1 மணி நேரம் முதலீட்டாளர்களும், பங்குதாரர்களும் தங்களுக்கு தேவையான பங்குகளை நிர்ணயம் செய்வார்கள். முஹுரத் வர்த்தகம் ஒரு புது தொடக்கத்தை குறிக்கும் பாரம்பரியமாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் முகரத் வர்த்தகத்தின் போது தங்களது பங்குகளை வாங்கினால் அதிர்ஷ்டமும் செல்வமும் பெருகும் என நம்புகிறார்கள். பொதுவாக முஹுரத் வர்த்தகம் மாலை வேளையில் செல்வத்தின் தெய்வமான தீபாவளி லட்சுமி பூஜையின் போது நடைபெறுகிறது.

பிற மார்க்கெட்டுகள் அந்த ஒரு நாள் அடைக்கப்படுகிறது. ஒரு மணி நேரம் மட்டுமே முஹுரத் வர்த்தகம் நடைபெறுகிறது. புதிய முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை தேர்ந்தெடுக்கவும் அந்த நாள் ஒரு வாய்ப்பாக அமைகிறது. முக்கியமாக ஒரு மணி நேரம் முஹுரத் வர்த்தகத்தின் போது மார்க்கெட்டின் நிலைகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். முஹுரத் வர்த்தகத்தின் போது முதலீட்டாளர்களும், பங்குதாரர்களும் அந்த வருடம் முழுவதும் தாங்கள் நினைக்கும் பங்குகளை வாங்கவும், விற்கவும் முடிவும்.