இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாட வாய்ப்புள்ளது..

ஐபிஎல் 16வது சீசனில் 4 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு இந்த சீசன் சிறப்பாக அமைந்தது. அந்த அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இதற்கிடையில், பென் ஸ்டோக்ஸின் உடற்தகுதி குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக சென்னை அணிக்கு ஒரு நல்ல செய்தி வெளிவந்துள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அங்கமான பென் ஸ்டோக்ஸ் அணிக்காக முதல் 2 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. இதன் பிறகு, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி 3 போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு முன் பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியாகும் செய்திகளின்படி, அவர் முழு உடல் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி குறித்து, முழங்கால் காயத்துடன் தொடர்ந்து போராடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் இதில் விளையாடாமல் இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில், அவர் இல்லாத நிலையில், அணியின் கேப்டன் பொறுப்பை பென் ஸ்டோக்ஸிடம் ஒப்படைக்கலாம்என கூறப்படுகிறது. ஆனால் அதிகார்வப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை..

சென்னை அணியின் பல வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் :

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே, சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே கைல் ஜேம்சன் மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகிய இருவர் காயமடைந்ததால் பெரிய பின்னடைவைச் சந்தித்தது, அவர்கள் காயம் காரணமாக முழு சீசனிலும் வெளியேறினர். அதே நேரத்தில், தீபக் சாஹர் மற்றும் சிசண்டா மகலா ஆகியோர் காயம் காரணமாக தற்போது ஆடாமல் இருக்கின்றனர்..

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு நடைபெறும் லீக் 29-வது ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் சாத்தியமான லெவன் :

சென்னை சூப்பர் கிங்ஸ் : ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ரஹானே, சிவம் துபே, அம்பதி ராயுடு, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்) துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா அல்லது பென் ஸ்டோக்ஸ், பத்திரனா.

ஹைதராபாத் சன்ரைசர்ஸ் : ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி.நடராஜன்.