நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

2023-24 பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கே அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5.94 லட்சம் கோடி அந்த அமைச்சகத்துக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்துக்கு 2.7 லட்சம் கோடி, ரயில்வேக்கு 2.4 லட்சம் கோடி, உணவு வழங்கலுக்கு 2.06 லட்சம் கோடி, உள்துறை 1.96 லட்சம் கோடி, ஊரக வளர்ச்சிக்கு 1.6 லட்சம் கோடி, விவசாயத்துக்கு 1.25 லட்சம் கோடி, தொலைத் தொடர்புக்கு 1.23 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.