சட்டமன்றம் & நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக 454 பேரும் எதிராக 2 பேரும் வாக்களித்தனர். அதாவது எந்த ஒரு கட்சியின் எதிர்ப்பும் இல்லாமல் மசோதா ஏறக்குறைய ஒருமனதாக நிறைவேறி இருக்கிறது. ஆனாலும் அதில் இருக்கும் சில குறைகளை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சுட்டிக் காட்டின.