மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை  கிளை அதிரடிஉத்தரவு பிறப்பித்துள்ளது..

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் நிர்வாகம் தரப்பில், மீனாட்சி அம்மன் கோயிலில் புகைப்படம், வீடியோ எடுக்க ஒப்பந்தம் கோரப்பட்டு அதன்படியே அனுமதி வழங்கப்படுகிறது என வாதம் முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து கோயில் தரப்பு பதிலை பதிவு செய்து, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது என்று கூறி முத்துக்குமார் என்பவர் வழக்கை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.. அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சிற்பங்கள், சிலைகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது..

.