நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை பன்னிரண்டு இலக்க தனித்துவ எண்களோடு வழங்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் வழங்கப்படும் ஆதார் அட்டை மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது. ஆதார் அட்டையில் குடிமக்கள் தங்களுடைய அனைத்து விவரங்களையும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் பத்து வருடங்கள் கடந்து அனைவரும் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது.

ஆதார்  அப்டேட் செய்யாத பட்சத்தில் கேன்சல் ஆகிவிடும் என்று தகவல்கள் பரவி வந்தது. இது குறித்து இந்திய தனித்து அடையாள ஆணையம் ஆனது வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆதார் அட்டை புதுப்பிக்காமல் இருந்தால் ஆதார் எண் கேன்சல் செய்யப்படாது என்று அறிவித்துள்ளது. மேலும் ஆதார் தொடர்பான தங்களுடைய குறைகளை பொதுமக்கள் UIDAI இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.