தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று சென்னை அமைந்தகரையில் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் செயல்படும் முறை குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகர்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் அண்ணாமலை பேசினார். அவர் பேசியதாவது, இம்முறை நாடு முழுவதும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். தென்னிந்தியாவில் இந்த முறை பாஜக அதிக அளவில் வேட்பாளர்களை பெறும். இதேபோன்று டெல்லியிலும் 60% வரை இம்முறை வாக்குகள் பெறும். 3-வது முறையாக நிச்சயம் பாஜக ஆட்சி அமைக்கும். இது காலத்தின் கட்டாயம். இதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பாஜகவின் வெற்றியை கொண்டாட அனைவரும் தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார்.