போலியாக மருந்து தயாரிக்கும் 18 நிறுவனங்களின் உரிமத்தை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அலுவலர்கள் ரத்து செய்துள்ளனர். உலகம் முழுவதும் நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் மனிதனின் வாழ்க்கையில் அத்தியாவசிய தேவையாக மருந்து தற்போது வந்து விட்டது. மிகப்பெரிய வணிக உலகத்தில் தற்போது மருத்துவமே உச்சகட்ட வணிகமாக இருந்து வருகின்றது. அதனால் பல மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள் உருவாகி வரும் பட்சத்தில் போலியான மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்களும் இருந்து வருகின்றன.

இந்நிலையில் தரம் இல்லாத போலியான மருந்துகளை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களை தடுக்கும் வகையில் கடந்த 15 நாட்களாக நாடு முழுவதும் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் 18 நிறுவனங்களின் உரிமைகளை ரத்து செய்துள்ளனர். 26 நிறுவனங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 20 மாநிலங்களில் சுமார் 76 மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் மருந்து கட்டுப்பாட்டை இயக்குனராக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில் இதில் தரம் குறைந்த மருந்துகளை தயாரித்ததாக 18 நிறுவனங்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.