கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் ரமேஷ் (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வினி (27) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் அஸ்வினியின் நடத்தையில் ரமேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது அஸ்வினி தன்னுடைய செல்போனில் வீடியோ கால் மூலம் பல நபர்களுடன் பேசியுள்ளார். இது தொடர்பாக ரமேஷுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அஸ்வினி தன் கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்ற நிலையில் இரு தினங்களுக்கு முன்பாக அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார்.

இதைத்தொடர்ந்து மறுநாள் திடீரென அஸ்வினி காணாமல் போன நிலையில் அது தொடர்பாக ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ரமேஷ் வீட்டின் அருகே ஒரு தோட்டத்தில் அஸ்வினி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் தன் மனைவியை ரமேஷ் கொலை செய்துவிட்டு அவர் காணாமல் போனதாக நாடகம் ஆடியது தெரியவந்தது. மேலும் இந்த கொலை வழக்கில் ரமேஷ் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.