நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிஎம் கிசான் திட்ட பயனாளிகளுக்கு 13ஆவது தவணை தொகை விடுவிக்க ஆதார் எண் அவசியம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் இணைத்து இருந்தால் மட்டுமே 2000 ரூபாய் வழங்கப்படும். எனவே பொது சேவை மையம் அல்லது பி எம் கிசான் வலைதளத்திற்கு சென்று ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை விவசாயிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த பணத்தை பெறுவதற்கு விவசாயிகள் இ கேஒய்சி அப்டேட் முடித்திருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.