பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அரசு தரப்பில் இருந்து நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் என ஒரு வருடத்தில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படும். இந்த பணம் நேரடியாக விவசாயிகளுடைய வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் கூடுதலாக ரூ.3000 சேர்த்து ஆண்டுக்கு ரூ. 9000 வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறும் மத்திய பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.