இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில்  ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் வந்தே பார்த் ரயில்கள் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

அதன்படி, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் நடப்பு நிதியாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என ஐசிஎப் தொழிற்சாலையின் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா தகவல் தெரிவித்துள்ளார். மேலும், குறுகிய தூர பயணங்களுக்கான, வந்தே மெட்ரோ ரயில் பெட்டிகளும் நடப்பு நிதியாண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.