பொதுவாக ஒரு வருடத்திற்குவருமானம் சார்ந்த தகவல்களை சேகரித்து வருமான வரியை தாக்கல் செய்ய அரசாங்கம் ஒவ்வொரு வருமான வரி செலுத்தும் நபருக்கும் நான்கு மாதம் கால அவகாசம் வழங்கி வருகிறது. வருமான வரி தாக்கல் செய்ய தவறிவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே வருகின்ற ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு வருமான வரி தாக்கல் செய்யக்கூடிய நபர்களிடம் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும் எனவும் இதனை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறிய அளவிலான வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் ஒருவரது வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் அவர் ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் செலுத்தினால் போதும். ஒரு நபர் அரசிடமிருந்து நோட்டீஸ் பெற்ற பிறகு வேண்டுமென்றே வருமான வரி தாக்கல் செய்யாமல் இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது அந்த நபருக்கு மூன்று மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.