நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் திட்டத்தில் வழங்கப்படும் அரிசியில் தரம் குறைவாக இருப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக அதிகாரிகளும் ரேஷன் கடைகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்த தரம் இல்லாத அரிசியை உண்பதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக ரேஷன் கடைகளில் மக்கள் உண்பதற்கு ஏதுவான அரிசியை விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை இழந்துள்ள நிலையில் இதனை கருதி தற்போது மத்திய அரசு ரேஷன் கடைகளில் சத்து நிறைந்த அரிசியை வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளது.இந்த அரிசி இதுவரை வழங்கப்பட்ட அரிசியை விட தரம் சிறப்பானதாக இருக்கும் எனவும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.