நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையானது ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இருப்பினும் கடந்த சில மாதங்களில் சிலிண்டர் விலை படிப்படியாக அதிகரித்து ஆயிரம் ரூபாயை தாண்டியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிக்கலை சந்தித்து வந்தார்கள். பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர்,   சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அமைச்சர் கூட்டத்தில் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார் . இதனால் 1118 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிலிண்டர் விலை ஆனது இந்த விலை குறைப்பின் காரணமாக இனி 918 விற்பனையாகும் என்பதனால் பொழுது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்  இதுகுறித்து  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே  கார்கே தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில், எப்பொழுது வாக்கு வங்கி சரியா ஆரம்பிக்கிறதோ அப்பொழுது தேர்தல் அன்பளிப்புகளை விநியோகிக்க ஆரம்பிக்கிறது பாஜக. மக்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்த இரக்கமற்ற மோடி அரசாங்கம் தற்போது தாய்மார்களிடமும் சகோதரிகளிடமும் தனது போலியான நல்ல எண்ணத்தை காட்ட முயற்சிக்கிறது. கடந்த ஒன்பதரை ஆண்டுகளுக்கு முன்பு 499 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் இப்பொழுது 1200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த 9 வருடங்களாக மக்களுடைய வாழ்க்கை சீரழிந்து கொண்டிருந்த போதெல்லாம் உங்களுடைய அன்பு பரிசு நினைவுக்கு வரவில்லை. பாஜகவால் அமல்படுத்தப்பட்ட பணம் வீக்கத்தை சமாளிப்பதற்கு பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு 500 ரூபாய்க்கு சிலிண்டரை வழங்க இருக்கிறது. ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்கள் ஏற்கனவே இதை அமல்படுத்தியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.