ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன் அரசுப் பள்ளி சவக்கிடங்காக மாறியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்னதாக நேர்ந்த பல ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர்கள் ராஜினாமா செய்த வரலாறுகள் உண்டு.

இந்த பட்டியலில் சுரேஷ் பாபு, மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் என பலர் உள்ளனர். இந்நிலையில், இதுவரை இல்லாத அளவிலான கோர விபத்தாக தற்போதைய ஒடிசா ரயில் விபத்து இருக்கிறது. இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.