தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்தான் ரோபோ சங்கர். இவர் முதலில் மிமிக்ரி கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நிலையில் அதன் பிறகு கலக்கப்போவது யாரு மற்றும் அசத்தப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் பலவிதமான குரல்களில் பேசி அசத்தி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு தான் சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்த நிலையில் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகின்றார்.

இவர் சமீபத்தில் உடல் எடை மெளிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் ரோபோ சங்கரின் குடும்பம் எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தற்போது குடும்பமே ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

INDRAJA SANKAR இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@indraja_sankar17)