ஆண்டி பயோட்டிக் மாத்திரை அட்டைகளில் சிவப்பு கோடு இருப்பதை பார்த்திருப்பீர்கள். அதனை மருந்து நிறுவனங்களின் பிரத்தியேக டிசைன் என பலரும் நினைக்கக்கூடும். உண்மையில் அது ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாகும். கோடு இருப்பின் அந்த மாத்திரை ஒருபோதும் மருத்துவரின் அனுமதி இன்றி பயன்படுத்தக் கூடாது. 2016 ஆம் ஆண்டிலிருந்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பெயரில் இந்த வழிமுறை பின்பற்றப்படுகிறது.