இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்து IIT, NIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பொறியியல் படிப்பு படிக்க, JEE நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

அதன்படி அடுத்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான JEE மெயின் நுழைவுத் தேர்வு 2 கட்டமாக நடத்தப்படுகிறது. அதில் முதல் கட்ட JEE மெயின் நுழைவுத் தேர்வு இன்று தொடங்கி 31ம் தேதி வரை இந்த தேர்வு நடக்க உள்ளது.