தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மூன்று மாதங்களாக குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சிலருக்கு தகுதி இருந்தும் உரிமை தொகை கிடைக்கவில்லை என்பதால் 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலமாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல் முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் மேல்முறையீட்டு விண்ணப்பங்களுக்கு கடந்த அக்டோபர் மாதத்திற்கான உரிமை தொகை வழங்கப்பட்ட நிலையில் இன்னும் சில விண்ணப்பங்கள் கள ஆய்வில் உள்ளதால் அந்த விண்ணப்பங்களில் உள்ள குடும்ப தலைவிகளின் செல்போன் எண்ணுக்கு அரசு ஊழியர்கள் தொடர்பு கொண்டு அவர்கள் விண்ணப்பங்களில் உள்ள விவரங்களை சரிபார்த்து வருகிறார்கள்.

மேலும் அந்த விண்ணப்பங்களுக்கு எஸ் எம் எஸ் வந்துள்ளது. அதில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து விசாரணைக்கு வரும்போது உரிய தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றும் நவம்பர் மாத இறுதிக்குள் தங்களது மேல்முறையீட்டு மனு பரிசீலனை செய்யப்படும் என எஸ்எம்எஸ் வந்துள்ளது. இந்த எஸ் எம் எஸ் வந்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் அடுத்தபடியாக போன் கால் வரும் என்றும் அதன் பிறகு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய தொகை செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.