முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமானது கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த திட்டத்தில் குடும்பத்தினரும் மருத்துவ வசதி பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.

5 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தின் மூலமாக மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணமாக வழங்குவீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் அது முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் என்று கூறியுள்ளார்.