நாம் ஒரு புது வீட்டிற்கு குடியேறும் போது அது வாடகை வீடாக இருந்தாலும் சரி சொந்த வீடாக இருந்தாலும் சரி பால் காய்ச்சுவது வழக்கம். அப்போது வாஸ்து பார்ப்பார்கள். அதற்கேற்றது போல பூஜை நடத்துவார்கள். இது போன்ற பல விஷயங்களை மேற்கொள்வார்கள். பால் காய்ச்சும் போது பால் எப்போதும் பொங்கி வழிய வேண்டும். பொங்கி வலியும் போது கிழக்கு திசை நோக்கி பால் பொங்க வேண்டும். இதுதான் அந்த வீட்டின் செலுத்தி நடையாளம் என நம்பப்படுகின்றது.

தூய்மையை குறிக்கும் அடையாளமாக பால் இருப்பதால் அது புதிய தொடக்கத்தையும் குறிக்கின்றது. இது வீட்டிற்குள் செல்வம் பெருகுவதை குறிக்கும். அதனைப் போலவே பலரும் வீட்டில் பால் நன்றாக நிரம்பி வழிந்தால் தான் ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவை பொங்கி வலியும் என்று நம்புகின்றனர். குடும்பத்தில் உள்ள எதிர்மறையை அகற்ற உதவும் நோக்கத்திலும் புதுமனை வீட்டில் பால் காய்ச்சுகிறார்கள்.