அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய்க்கான புதிய மருந்தை தற்போது உருவாக்கியுள்ளனர். இந்த மருந்துக்கு AOH1996 என்று பெயரிடப்பட்டுள்ளது. அன்னா ஒலிவியா ஹீலி என்ற குழந்தைக்கு நியூரோபிளாஸ்டோமா இருந்தது. புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடிய அவர் ஒன்பது வயதில் தனது வாழ்க்கையை இழந்தார். அவரின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றொரு குழந்தைக்கு இதே நிலை ஏற்படாமல் இருப்பதற்கு இந்த மருந்தை உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 600 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவிடம் புற்று நோய்க்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.