18 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளை பைக் மற்றும் கார் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் வாகனங்களை இயக்கி அவர்களுக்கும் பிறருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனை தடுப்பதற்காக உத்தரப்பிரதேசம் மாநில அரசை இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.