பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகர், இயக்குநருமான ஜாலி பாஸ்டியன் (57) மாரடைப்பால் இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 900-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ‘லாக் டவுன் டைரி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராகவும் அறிமுகமானார். ரஜினி, சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, சிவராஜ் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.