பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டமானது தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் உதவுகிறது.

அதன்படி நடப்பாண்டு (2023-2024) சம்பா, தாளடி பருவத்தில் இப்கோ டோக்கியோ பொது காப்பீடு நிறுவனத்தின் மூலம் பயிர்காப்பீடு செயல்படுத்தப்படவுள்ளது. நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் நெற்பயிர் காப்பீடு செய்ய கிராம அளவில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாளாகும்.