தமிழகத்தில் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் புதிய பாலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பழைய தூக்கு பாலம் திறக்கப்படாது. அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் சோதனை ஓட்டத்தின் போது புதிய தூக்கு பாலம் திறக்கப்பட உள்ளது. தற்போது பாம்பன் கடற்கரையில் 700 டன் எடையுள்ள தூக்கு பாலம் வடிவமைக்கும் பணிகள் முடிவடைந்து மார்ச் 12 முதல் நிலுவையில் உள்ள 500 மீட்டர் தூரம் பாலம் வழியாக தூக்கு பாலத்தை ரயில்வே ஒப்பந்த பொறியாளர்கள் எடுத்துச் செல்கிறார்கள்.

இந்த மாதம் இறுதியில் தூக்குபாலத்தை புதிய பாலத்தை பொறுத்து உள்ளதால் 2 பாலம் நடுவில் உள்ள கடலில் தற்காலிக தூண்கள் அமைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்கு பாம்பன் பாலம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.