தமிழக சட்டப்பேரபையில் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்ததால் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் பெரும் பரபரப்பு நிலவியது நிலையில் ஆளுநர் உரையாற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அவர் ஆளுநர் அரசின் கொள்கைக்கு மாறாக தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை படிக்காமல் புறக்கணித்தது மிகவும் வருத்தமான விஷயம். அதோடு அச்சடிக்கப்பட்ட உரையை படிக்காத ஆளுநரின் உரையை உடனடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினார். அதன்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆளுநர் உடனடியாக அவையை புறக்கணித்துவிட்டு சென்றார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக துணிவோடு வாரிசை எதிர்க்கும் என அண்ணாமலை பெருமிதம் தெரிவித்தார். இதுபற்றி அவர், தமிழகம், தமிழ்நாடு இரண்டும் ஒன்றுதான். ஆளுநர் தமிழகம் என்று கூறியதில் தவறில்லை. திமுக பயன்படுத்தும் ஒன்றிய அரசு என்பது தான் தவறான வார்த்தை. திமுக கொடுத்ததை ஆளுநர் அப்படியே வாசித்துள்ளார். எந்த இடத்திலும் தனது சொந்த கருத்தை திணிக்கவில்லை. சில விஷயங்களை அவர் தவிர்த்துள்ளார் காரணம் அது பொய் என்பதால், மட்டுமே என்றார்.