சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 600க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நாள்தோறும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும்   ரயில் சேவைக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இதில் பயணிகளுக்கான கூடுதல் வசதிகள் உள்ளிட்டவைகள் இடம் பெறும். ஆனால் புதிய கால அட்டவணையில் கூடுதல் ரயில் சேவைகள் இல்லாதது வருத்தம் அளிப்பதாகவும், கூடுதல் ரயில் சேவைகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் தரப்பில் கூறப்பட்டது. தற்போது, பயணிகளிடம் இருந்து அதிகளவும் மனுக்கள் வருவதால் தெற்கு ரயில்வே அதிரடியாக விளக்கம் அளித்துள்ளது.

ஈலையில் சென்னை ரயில்வே கோட்ட பல பகுதிகளில் வழித்தட பராமரிப்பு மேம்பால பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு புதிய கால அட்டவணை அமலுக்கு வந்துள்ளது. இந்த பணிகள் நிறைவு செய்த பிறகு கூடுதல் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் திருத்தப்பட்ட அட்டவணை இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளதால் புறநகர் ரயில் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.